75ம் ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கட்டையர் பழனி அவர்களின் 75ம் ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி.
இன்று உங்களின் 75ம் ஆண்டு பிறந்தநாள்
நீங்கள் எங்களைப் பிரிந்து ஆண்டுகள் ஆனது
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம்...
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
தகவல்:
குடும்பத்தினர்