யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜப்பானை வசிப்பிடமாவும் கொண்ட கதிர்வேற்பிள்ளை மனோகர் அவர்கள் கடந்த 06-11-2019 புதன்கிழமை அன்று ஜப்பானில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்வரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr. M.K. முருகானந்தன், பங்கையற்செல்வி, பாலசெளந்தரி, மகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ருத்திரன்(லண்டன்), செல்வபாரதி, திருச்செல்வகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are deeply saddened by the news, our thoughts and prayers are with you and your family