யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு வீரசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஐந்தாண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
எமை வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
எம் ஆயுள்வரை உன்னதமாய் நினைத்திருப்போம்
நீங்கள் நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ?
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அப்பாவே இழந்தோம்
பெற்று பாலூட்டி
வளர்த்த
அம்மாவே இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது
ஏனென்று புரியவில்லையம்மா!
உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.