
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு சரஸ்வதி அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற பத்மாவதி, இராசமலர், திலகவதி, Dr. சின்னத்தம்பி(நியூசிலாந்து), சிவசுப்பிரமணியம்(பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, பாலகோபாலன், Dr.யோகவதனி(நியூசிலாந்து), Dr. ஜெயராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,
கவிதா(அவுஸ்திரேலியா), Dr.காண்டீபன்(பொதுவைத்திய நிபுணர் - யாழ் போதனா வைத்தியசாலை), கங்கைவேணியன் (அவுஸ்திரேலியா), காயத்திரி(அவுஸ்திரேலியா), பூங்குழலி(விரிவுரையாளர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), Dr. கோகுலன்(கொழும்பு தேசிய வைத்தியசாலை), கபிலன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
Dr. மதுராந்தகன்(அவுஸ்திரேலியா), கரிகாலன்(நியூசிலாந்து), அஸ்வின்(அவுஸ்திரேலியா), சோபா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த மாமியும்,
யோகேந்திரா(அவுஸ்திரேலியா), Dr. தர்ஷிகா(மந்திகை ஆதார வைத்தியசாலை), மனோஜா(அவுஸ்திரேலியா), அரவிந்தன்(அவுஸ்திரேலியா), சிறிசங்கீர்த்தனன்(அவுஸ்திரேலியா), காயத்திரி(நியூசிலாந்து) ஆகியோரின் பெரிய மாமியும்,
தருண், கவின், கருண், தர்மிகன், தானியா, வியன், ஆரணன், ஆதிரா, கிரிஷ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-05-2022 புதன்கிழமமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 19-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 09.00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
அரிச்சந்திரன் வளவு,
புலோலி தெற்கு,
புலோலி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details