Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 21 OCT 1946
உதிர்வு 06 MAY 2024
அமரர் கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி
வயது 77
அமரர் கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி 1946 - 2024 காரைநகர் வலந்தலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகர் வலந்தலை சயம்பு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

 அம்மா நீங்கள் எங்களை பிரிந்து
சென்று ஓராண்டு ஆனாலும்
எங்கள் இதயங்களில் என்றும்
 நிறைந்து இருக்கிறீர்கள்
எத்தனை உறவுகள் அருகில் இருந்தும்
அனாதைகளாக உணர்ந்தோம் அம்மா
 உங்கள் அன்பிற்கு ஈடாகுமா?

அம்மா உங்கள் நினைவுகளை
எம் நெஞ்சினில் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்கி நிற்கின்றோம்
இந்த நாளை மறக்கவுமில்லை!!!
மறக்க முடியவுமில்லை அம்மா

உங்களை காண
உங்களுடைய குரலை கேட்க
நாங்கள் ஏங்கி தவிக்கின்றோம் அம்மா
காரணம் புரியவில்லை
நீங்கள் இல்லையென்று
மனம் ஏற்க மறுக்கிறது அம்மா

எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும் அம்மா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்