யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு வள்ளியம்மை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாரினை விட்டகன்று பரமனடி சேர்ந்து
இன்று
பத்தாண்டுகள் பறந்தோடினதே
பத்தாண்டுகள் என்ன நூறு யுகங்கள் ஆனாலும்
மறையாது அம்மா உங்கள் நினைவு
மாறாது அம்மா எங்கள் துயரம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அம்மா
உங்கள் உறவுக்கு ஈடாகுமா
நம் வீட்டு அவரில் புகைப்படமாய்
நீ இருந்து
வழி காட்ட வேண்டுமென்று
வணங்குகின்றோம் தினமும்- அம்மா
அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்
வாழ்ந்துகாட்டி
தேடிய புண்ணியம் போதுமென்று
வந்தவழி
சென்றுவிட வேண்டுமென்று
இப்பூவுலகில்
வாழ்வை முடித்து
விண்ணுலகம் சென்று இன்று
பத்தாண்டுகள் ஆனதுவோ
அம்மா
நீங்கள் பெற்றெடுத்த முத்துக்கள் மூன்று
கலங்கி
நின்று உங்கள் வரவைத் தேடுகின்றோம்.
ஆண்டவன் அழைப்பு இது தான் என்று
ஆற்றுகின்றோம் எம்மை நாமே
என்றென்றும் உங்கள் நினைவில்
இப்பூவுலகின் நாம் இருப்போம்
ஈசன் பாதம் இணைந்திருந்து
காத்திடுவீர் எம்மை என்றும்!
ஓம் சாந்தி