
யாழ். புலோலி கிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு சூசையப்பர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கதிர்காமு அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,
முருகானந்ததாஸ்(ஆசிரியர்- வல்வெட்டி இ.த.க.பாடசாலை), கிருபானந்ததாஸ்(கனடா), அருளானந்ததேவி, கலாநந்ததேவி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தி(ஆசிரியை- நெல்லியடி மெ.மி.த.க.பாடசாலை), மாலினி(கனடா), கலாநாதன்(நாதன் ஸ்ரோர்ஸ்), மணிவாசகன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாவலன், கவிதன், கீதனன், மதுஷான், மதுரன், மகிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my deepest condolences for your family’s loss. May his/her soul rest in peace