சென்று வாருங்கள் பெரியப்பா! உங்கள் புன்னகை தவழும் சிரிப்பும் சந்தனம் பதிந்த நெற்றியும் மற்றையோர் மனதில் என்றும் அகலாதவை! பெரியம்மாவும், சகோதரர்களும் ஒளி இழந்து இருக்கும் உங்கள் விழிகளை எண்ணி விழிநீர் சொரிகின்றனர்! பாசத்துக்குரிய பேரப்பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்றீர்களோ! உங்கள் பின்னால் கூடி நின்ற பெறாமக்களையும் மருமக்களையும் விட்டுக் காணாத்தூரம் சென்றீர்களோ பெரியப்பா! கை கூப்பி நின்ற மைத்துனிகளும், மைத்துனர்களும், சகோதரர்களும் உங்கள் பிரிவால் மனம் வாட விட்டுச் சென்றீர்களோ! ஊரவர் நன்மை தீமை எனில் முன் நிற்கும் உங்கள் கால்கள் இன்று அடங்கிய பாதங்கள் ஆகினவோ! உற்றாரும் உறவினரும் விம்மி அழும் குரல் உங்கள் காதுகளில் கேட்கின்றதோ பெரியப்பா? வாழும் வரை வாழ்ந்து விட்டேன் என நினைத்து எமை விட்டு அகன்றீர்களோ பெரியப்பா! நீங்கள் தடம் பதித்த நற்பாதை உண்டு! வழி தொடர்வர் உங்கள் வழி சேர்ந்தோர்! சென்று வாருங்கள் பெரியப்பா - நீங்கள் மீண்டும் ஓர் பிறப்பு எடுத்து எம் அகம் மகிழ மீண்டு வரும் வரை காத்திருப்போம்! சென்று வாருங்கள் பெரியப்பா!