
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நடராசா அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு ராசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
குலேபாகா(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா(பிரான்ஸ்) அவரக்ளின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கம்மா, காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நகுலேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீ கிரிஷ்ணமூர்த்தி, சத்தியலஷ்க்மி, காலஞ்சென்ற நகுலராசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற லீலறோஜினி, விமலறோஜினி, புஷ்பறோஜினி, சகிலறோஜினி, லலிதறோஜினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சயானா, யதர்ஷன், யதர்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராமதாஸ்- மேனகா, பத்மநாதன்- ராஜீ ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை காளி கோவிலடி, தாவடி வடக்கு , கொக்குவில் என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.