
யாழ். தாவளை இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கிருஸ்ணபிள்ளை அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னப்பு கதிரவேலு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
இலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன்(லண்டன்), சுதாகர்(லண்டன்), லக்சனன்(இலங்கை), அருளினி(இலங்கை) , நவீனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமாரி(லண்டன்), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினோச்(லண்டன்), தனியா(லண்டன்), அஸ்மிகா (லண்டன்), அபினா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கஞ்சாமடு சாலம்பப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.