யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு காங்கேசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவின் பத்தாவது ஆத்மசாந்திக்காய்
அன்பின் திரு உருவே ஆசை அப்பாவே
ஆண்டுகள் பத்து ஆனதப்பா நீ மறைந்து
சீரோடும் சிறப்போடும் நாம் வாழ
நீங்கள் சிந்திய வியர்வைத் துளிகள் வீண்போகவில்லை
உங்கள் விருப்பம் போலும் நன்மறைபோலும்- பிள்ளைகள்
நால்வரும் நலமோடும் நற்பெயரோடும்- உங்கள்
பெயர்காத்து வாழ்கிறோம் அப்பா
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை- என்ற
தாரக மந்திரத்தை எம் சிந்தையில் நிலை நிறுத்தி
நாம் சிறப்போடு வாழ்கிறோம்
எங்கள் சிரம் தாழ்த்தி உங்களை வணங்குறோம்
ஆலமரமாய் எம்மைக் காத்த அப்பாவே- உங்களை
என்றென்றும் போற்றுகிறோம் எங்கள்
கண்களில் இருந்து நீங்கள் மறைந்தாலும்
ஆண்டு பத்து ஓடி மறைந்தாலும்
விழும் மழைத் துளியும் வீசுகின்ற காற்றும்
வாழுகின்ற காலம் வரை
உங்கள் நாமம் வாழும் அப்பா
என்றும் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமகன், மருமகள், சகோதர, சகோதரிகள், பேரப்பிள்ளைகள்.
Rest In Peace