1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:12/06/2025
யாழ். காரைநகர் அருகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு அருளானந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் உருண்டோடி
ஓராண்டை கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லை
உம் நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குதில்லை
உம் ஒளிமுகம் தோன்றுவதால்
ஆயிரம் உறவுகள் வந்து
ஆறுதல் கூறினாலும்
எம் அருகில் நீங்கள்
இன்று இல்லையே
நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
உம் நினைவுகளை நெஞ்சம் மறக்குதில்லை
எம் குடும்பத்திற்கு நல்ல தலைவனாய்
எம் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய்,
உற்றார், உறவினர், நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாய்
எமக்கெலாம் கலங்கரை விளக்காய்
இருந்தீரே இன்று காலனதை அணைத்ததேனோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்