யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும் France, பிரித்தானியா லண்டன் Barkingside ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை கஜேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்து எம் துயரத்தில் பங்கெடுத்து ஆறுதல் கூறியவர்கள்,
தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு தங்கள் அனுதாபத்தை தெரிவித்தவர்கள்,
மலர்வளையம், மலர்ச்செண்டு வைத்து தங்கள் ஆழ்ந்த இரங்கலை செலுத்தியவர்கள்,
இத்துன்பமான நேரத்தில் ஆகாரம் மற்றும் பிற பொருட்களை வழங்கி துன்பத்தில் பங்கெடுத்து எம்மை ஆற்றியவர்கள்,
இக்கட்டான நேரங்களில் போக்குவரத்து வசதிகளை செய்து உதவியவர்கள்,
அவரது இறுதிச்சடங்கு முறையாகவும் சிறப்பாகவும் நடைபெற உதவிய குருக்கள் மற்றும் உதவியாளர்கள்,
மண்டபத்தில் உணவுப்பரிமாற்றம் செய்ய உதவிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்கள்,
அவரின் இழப்பை பலருக்கு தெரியப்படுத்த உதவிய இணையச்செய்திச்சேவை( Lanka Sri) மற்றும் பத்திரிகைகள்,
அன்றைய இரவில் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்துதவிய London Ambulance Service உத்தியோகத்தவர்கள்,
அவரின் இறுதிப் பயண நேரத்தில் அவருக்கு இராஜ மரியாதை செய்த London Ambulance Service Military Group உறுப்பினர்கள்,
மற்றும் பற்பல வகையிலும் உதவிகள் செய்து எம்மை ஆறுதல் படுத்தியவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.