கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, யாழ். வடமராட்சி அம்பன் குடத்தனை பகுதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த காசிநாதர் கார்த்திகேசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01/09/2023.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும்
விட்டு பிரிந்தது ஏனோ?
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள்
இப்பூவுலகில் இல்லை
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்
குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை
வாட்டுகின்றது அப்பா
அப்பா எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?
ஆண்டுகள் ஐந்து ஆனதப்பா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதப்பா!
அன்னாரின் திதி நிகழ்வுகள் வருகின்ற 01/09/2023, வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.