யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wilhelmshaven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் கருணாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம் குடும்ப குலவிளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்.
எத்தனை எத்தனை நினைவுகளை
ஏக்கத்துடன் நெஞ்சில் சுமந்து வந்தீர்கள்.
அத்தனையும் அழிந்து சென்றதுவோ?.
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்.
உங்கள் மாறாத கொள்கைத் தமிழினப் பற்றும்
ஊர் வாசம் ததும்பும் அத்தனை ஆசைகளும்
மண்ணோடு மறைந்து போனதுவோ?
உங்கள் அன்பான வார்த்தைகள் என்றும்
எங்கள் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
உங்கள் ஆத்மா இறைவன் திருவடியில்
அமைதிபெற எங்கள் பிரார்த்தனைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-08-2026 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அனலைதீவு புளியந்தீவு புனீத தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகைத் தந்து ஆத்ம சாந்திப் பிரர்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4917656701498