Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1939
இறப்பு 10 NOV 2025
திருமதி கருணைபூசணி கனகசுந்தரம் (புஸ்பராணி)
வயது 85
திருமதி கருணைபூசணி கனகசுந்தரம் 1939 - 2025 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை மற்றும் மானிப்பாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கருணைபூசணி கனகசுந்தரம் அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம்(இராசையா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சிவஜா(UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, சிவானந்தன்(UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விசாளன், சாஜினி, பவ்யா, மதுஷா வினுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மீனா, மாயா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசரத்தினம், லோகேஸ்வரி, கோபாலபிள்ளை. தியாகராஜா மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னலட்சுமியின் ஆசை மச்சாளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக நாவலடி ஒழுங்கை, மானிப்பாய் (சுதுமலைச்சந்தியருகில்) இல்லத்தில் வைக்கப்பட்டு 12-11-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பி.ப 12.00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர் Mobile : +94773315413

தகவல்: சிவஜா சிவானந்தன்