யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி பாரதி வீதி, பிரான்ஸ் பரிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி கருணைநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புள்ள அம்மா!
உங்களை நினைக்கும் போது வரும்
கண்ணீரை நாங்கள் துடைத்தாலும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது..
காலங்கள் பல கடந்தாலும்
கண்மணிகள் நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறைவரம் ஏதும் தாரோயோ அம்மா...
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...
கண்ணுக்குள் மணிபோல்
இமைபோல் காத்தோயே அம்மா...
உங்களை காலன் எனும் பெயரில்
வந்தகயவன் களவாடி சென்றதேனோ...
நீங்கள் விண்ணில் கலந்த நாள் முதல்
எங்கள் விழிகள் உங்களையே தேடுகின்றது
பார்த்து பழகிய கண்களும்
பேசிப் பழகிய வாயும்
கேட்டு மகிழ்ந்த காதுகளும்
நினைவுகள் பதித்த நெஞ்சும்
உம் உருவம் இல்லாமல் ஏங்குகிறதே!
என் துணையாய் வந்த தேவதையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
It was a pleasure to have met your Mum. May she rest in peace. With deepest condolences from all at Sancroft Home .