யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்திகேசு விக்னேஸ்வரநாதன் அவர்கள் மற்றும் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேதாரகெளரி விக்னேஸ்வரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உமை பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் என்றும் அணையாத சுடராய்
என்றும் இருப்பாய் அப்பா, அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகின்றோம்!!!
உங்கள் பிரிவால் வாடும் கயூரன்(மகன்), கஸ்தூரன்(மகன்), கார்த்திகா(மகள்), சஞ்ஜீவ்(மருமகன்), ஹேமனிகா(பேத்தி).