Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 11 APR 1922
மறைவு 23 OCT 2024
திரு கார்த்திகேசு வேலுப்பிள்ளை (பாண்டியர்)
வயது 102
திரு கார்த்திகேசு வேலுப்பிள்ளை 1922 - 2024 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், அம்பனை, பன்னாலை, தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வேலுப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா...!!!
தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து முடித்து
தனியாக இப்போது எம்மை
விட்டு போய்விட்டார்நாட்கள் முப்பத்தொன்று அல்ல
ஆயிரந்தான் சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்றைய தினம் மு.ப10.00 மணியளவில் அவரதுஇ இல்லத்திலும், நடைபெற்று ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் 23-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் “பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில்" நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.