யாழ். புளியங்கூடல் வடக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், புளியங்கூடலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கார்த்திக்கேசு நாகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு 31 நாட்கள்ஆனதுவே
நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்!
அன்பாய் அப்பா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லை
மீண்டும் நீ வாரும் அப்பா!
வாழ்ந்திட இவ்வுலகில் நீ
வரும் காலம் வரும் என எண்ணி
வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் “சாட்டி புனித தீர்த்தக் கரையிலும் ” வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 11-05-2024 சனிக்கிழமை அன்று பி.ப 11:00 மணியளவில் “அவரது இல்லத்திலும்” இடம்பெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து, அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
புளியங்கூடல் வடக்கு,
ஊர்காவற்துறை.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. May Aiya soul rest in peace..