யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகா ஞானேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை நரகமாய் உள்ளது மகளே!!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது..
நீ வேண்டும் எங்களுக்கு உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
ஆண்டுகள் பத்து
பத்தாயிரம் ஆண்டுகள் சென்றாலும்,
தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்
உன் அழகான முகம், அன்பான மனம்,
உன் குழந்தை குணம்,
இதையெல்லாம் நினைத்துப் பார்க்க
ஒரு ஜென்மம் போதாது மகளே!!
இறைவன் அவனுக்கு பிடித்தவர்களை சீக்கிரமே
தன்னுடனேயே கூப்பிட்டு விடுவானாம்
இத்தனை நல்ல குணம் படைத்த உன்னையும் அவன்
தன்னிடமே அழைத்து விட்டான்
She will come back in another avathaaram in your life. Be positive and live with Her sweet memories. May God keep giving strength to you all.