Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1950
இறப்பு 22 OCT 2025
திரு கார்த்திகேசு தியாகேஸ்வரன் (சின்னத்துரை)
வயது 75
திரு கார்த்திகேசு தியாகேஸ்வரன் 1950 - 2025 கைதடி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடி மேற்கு கைதடி உடையார்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தியாகேஸ்வரன் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகம்மா தம்பதிகளின் புதல்வனும்,

தவமணி, சிவராஜா(கனடா), நித்தியானந்தன்(ஓய்வுபெற்ற மாநகரசபை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சகுந்தலாதேவி மற்றும் சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முகுந்தன்(தென் ஆப்பிரிக்கா), சயந்தன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜாளினி(தென் ஆப்பிரிக்கா), சுமித்திரா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

வாகீசன், சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கார்த்திகேயன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

நிஸ்மிதா(இத்தாலி), காவியா, நந்திகா((தென் ஆப்பிரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2025 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming - RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
வீடு- குடும்பத்தினர்: +94766974177

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices