யாழ். அல்வாய் வடக்கு சத்திரந்தை திக்கத்தைப் பிறப்பிடமாகவும், துன்னாலை இந்திரன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுப்பிரமணியம் அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் பாசமிகு கணவரும்,
திருவேணி(ஆசிரியர் யாழ்/மத்திய கல்லூரி), கலைவாணி(லண்டன்), இந்திரதாஸ்(ஆசிரியர் ஊரெழு கணேச வித்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவநேசன்(ஆசிரியர் யாழ்/ ஹாட்டிக் கல்லூரி), குருபரன்(லண்டன்), மோகனபிரியா(ஆசிரியை- யா/ அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, செல்லத்தம்பி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிநயா, ஆரணி, அஷ்மிகா, கம்சனா, தக்சயன், தக்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.