யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கனகரெத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பினால் எம்மை கட்டியாண்டு
பண்புகள் பல சொல்லித் தந்து
பாசவுணர்வுகள் ஊட்டி எங்களை
பாதுகாத்து வளர்த்த எங்கள் அப்பா!
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்?
சிறந்த குடும்பத்தலைவனாய் சீர்போற்ற
வாழ்ந்து எங்களுக்கான இலக்கணம்
படைத்த நீங்கள் இவ்வுலகை விட்டு
சென்ற தேனோ அப்பா!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலம் கனவாகிபோய்
ஈரைந்து ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் இதயம் விட்டு மறையாமல்
பல நூற்றாண்டு வாழ்வீர்கள் அப்பா!
குடும்பத்தின் ஆணிவேராய் இருந்து
பேணிகாத்த எம் இதயத் தெய்வமே
நீங்கள் மறைந்தாலும் இறையாக காத்தருள
வேண்டி கண்ணீர் மல்க உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி...