அமரர் கார்த்திகேசு கோவிந்தபிள்ளை
பிறப்பு: 20 JUL 1925 இறப்பு: 27 JAN 2015
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Eastham வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கோவிந்தபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் கோவிந்தபிள்ளை இராசநாயகம்
பிறப்பு :
22 Jul, 1928 இறப்பு :
25 Sep, 2014
யாழ். சாவகச்சேரி பெருங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தபிள்ளை இராசநாயகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் தாய் தந்தையே உங்களைப் பிரிந்து
பத்து ஆண்டுகள் கடந்ததுவே!
அருள் விளக்கே நீங்கள் அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதே மம்மி! பப்பா!
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்
நித்தமும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுது
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றீர்கள்...
அரும்பசி வந்தபோது மம்மி உன் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும் என்ன
தந்தையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு...
உங்களுக்குப் பிள்ளைகளாகப் பிறக்க
பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்துள்ளோம்.
அற்புதமான மனிதராய், நல்லதோர் ஆசானாக,
அதிபராக ஊருக்குள் சுடர் ஒளியாகத் திகழ்ந்தீர்கள்.
உங்களின் ஆசியும், ஆசீர்வாதமும் என்றென்றும்
எமக்குக் கிடைக்க வேண்டுகிறோம்.
நீங்காத தீபங்களாக என்றும்
எங்கள்
உள்ளங்களில் ஒளிர்ந்து
கொண்டிருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.