

யாழ். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கற்பகம் கனகரத்தினம் அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி, முகுந்தன், அனுசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலநாதன், அருள்தேவி, சுபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, செல்வராசா மற்றும் வரதலட்சுமி, ஞானசேகரம், தவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யுரேன், சரண்யா, தனுசிகன், பவித்திரா, அபிநயா, துஷிக்கா, துஷாந், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.