
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பஞ்சலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: ஸப்தமி (28-01-2023)
புன்னகை பூத்த மலரொன்று
பூமியில் விதைக்கப்பட்டு
10 ஆண்டுகள்
கடந்தும்
ஆறிடவில்லை எங்களின் துன்பம்
ஆயிரம் கனவுகளுடன் கை கோர்த்த
எம் வாழ்க்கை பாசத்தால் மிளிர்ந்த
எம் வாழ்வும் அன்பால் இணைந்த
எம் பந்தமும் நீண்டதொரு பயணமாய் இருக்குமென
நாங்கள் தான் நினைத்திருந்தோம்
பாதிவழி செல்லும் முன்பே ஐயப்பனை தரிசிக்க சென்று
இடையில் காலனவன் புகுந்தானோ
காலனவன் தன்கணக்கை சரியாக்க
தங்களுடன் கரம் கோர்த்தானோ பழகிய
பந்தமும் பாசமும் எங்கள் முன்னே நிலையாய்
நிலைத்து நிற்க நினைவுகளை மட்டும்
நிரந்தரமாக நிலைக்க நிலைமாறிப்
போனிர்கள் நீங்கள்
இவ்வாழ்க்கை இவ்வுலகில் போதுமென
விண்ணுலகில் வாழ்ந்திட
விரைந்துதான் சென்றீர்கள்.
ஐயப்பனை தரிசித்து வருவேன் என சென்ற நீங்கள்
10ஆண்டுகள் ஆகியும் உங்கள் நினைவுகளோடு
காலங்கள் எல்லாம் ஆண்டுகள் பல ஆனாலும்
எங்கள் எல்லோரையும் காத்து நிற்பீர்களென
இதயத்தின் இனிய நினைவுகளை
இசை மீட்டியே வாழ்கின்றோம்
காலங்கள் முழுவதும்
10 ஆண்டுகள் கடந்தும்
நீங்கா நினைவுகளுடன்
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.