
யாழ். அச்சுவேலி இடைக்காடு பெருமளவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Clarens ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சாந்தகுமார் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, ஞானபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானரதி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சரணிதன், சாரங்கன், தருணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோயினி, சத்தியமூர்த்தி, சாந்தரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சதீஸ்ஜா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், கலைச்செல்வன் மற்றும் மகேசன், கஜேந்தினி அட்ஷயா, அபிஷா, அபிசன், அஸ்வின், சரண்யா, சனுஜன், பிரவீனா, கவீனா, கேசிகன், கௌசிகன், கௌதமன், அபிசன், கீர்த்திகன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
நடராஜா, புவனேஸ்வரி, சிறிபாலா, இரவீந்திரன், ஞானேந்திரன், சிவேந்திரன், தயாபரன், ரூபிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷேவிதன், நிஜேந்தன், நிதுஜன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
வளர்மதி, தயாநிதி, தனுஜா, காஜினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். அத்தோடு அவரின் குடும்பத்தாரிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!