35ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமி இராமலிங்கம்
(ராமு)
வயது 29
Tribute
0
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், மன்னார், இந்தியா, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராமலிங்கம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு எனும் பாசறையில்
அணையாத ஒளிவிளக்காய்
மங்காது ஒளிவீசும்
மாசற்ற சந்திரனே
உங்களன்பு இதயமதில்
நாமிணைந்து நிற்கையிலே
பொறுக்காத காலனவன் - உங்களை
பறித்தெடுத்து சென்றதேனோ!
கட்டிய மனைவிக்கும்,
காத்தெடுத்த பிள்ளைகட்கும்
கதையேதும் சொல்லாமல்
கதியிலே சென்றதேனோ?
கல்லறையில் தானுறங்க - எம்மை
கண்ணீரில் கரையவிட்டு
தனிமையில் சென்றீரோ?
பாரினிலே எம்வேதனைக்கு
பரிசாக
ஒருமுறை ஒரேயொருமுறை
மீண்டும்
மலராதா உங்கள் முகம்
அப்பா என்றழைக்க
ஆதங்கமாய்
இருக்கிறதே
ஏன்
எமக்கென்று யாருண்டு?
மறு ஜென்மம் உண்மையெனில்
மன்றாடிக் கேட்கின்றோம் - உங்கள்
அன்புப்பிள்ளைகளாய் பிறப்பெடுக்க!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute