Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 MAY 1942
மறைவு 02 FEB 2021
அமரர் கந்தசாமி புவனேஸ்வரி
வயது 78
அமரர் கந்தசாமி புவனேஸ்வரி 1942 - 2021 அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரதைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி புவனேஸ்வரி அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,

திருறஞ்சனி(கனடா), சிறிதரன்(கனடா), யோகநிதி(கனடா), நளினி(கனடா), முரளிதரன்(மலேசியா), காலஞ்சென்றவர்களான சிறிவதனி, விக்கினேஸ்வரன், அப்பன், ஈசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், பேரின்பநாயகி மற்றும் சண்முகசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,

 தயாநிதி(கனடா), வக்‌ஷலா(கனடா), ஜெயந்தன்(கனடா), வரதன்(கனடா), கலைவாணி(மலேசியா) ஆகியோரின் மாமியாரும்,

நடராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பரமேஸ்வரன், பாஸ்கரன், தியாகராசா, சிவலிங்கம், கிளி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), பரமலிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் மைத்துனியும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான திவேக், மதூன், மதுசா, மர்வீனா, சாய்மேனன், த்ரிஷானா, ஆர்த்திகா, நேருஷன், ஆருஷன், சாருஷன்,வைதிகன், வைஷணன், நிலானி, ஹேர்வின்(மலேசியா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை நேரடி ஒளிபரப்பு 08-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00மணிவரை காண்பிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices