யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பராசக்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்றாகிற்று இம்
மண்ணைவிட்டு நீ சென்று
நீ வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ
தூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா
மற்றவர் துயர்கண்டு துடிப்பவளே!
உந்தன் செல்வங்கள் கதறுகின்றனவே..
அணைக்க மறந்ததேன் அவர்களை
என்ன தவறு செய்தனர் இம்மண்ணில்
மரணிக்க வில்லையம்மா நீரிப்போ
மெளனமாய் உறங்குகிறீர் கண்மூடி
பிரிவென்று உமக்கில்லை மண்ணில்
பரிவோடு எம்பக்கம் இருக்கின்றீர்
இப்படிதான் எண்ணிக் கொள்வோம்
போகும் வழியில் நாமினையும் வரை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வும் மதிய போசனமும் 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் 16:00 மணிவரை Dorfhaus Hunstig, Hermann-Kind-StralBe 30A, 51645 Gummersbach, எனும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
முகவரி:
DORTFGEMEINSCHAFTSHAUS HUNSTIG,
HERMANN KIND STRASSE 30A,
GUMMERSBACH
Our deepest condolences from Mathy and Sakthy.