யாழ். அளவெட்டி தெற்கை அடுவம்பற்றையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி கௌரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா நீ எங்கே
பிள்ளைகள் பிள்ளைகள் என்று கூப்பிடும்
உந்தன் இனிய குரல் எங்கள் காதில்
ஒலித்துக்கொண்டே இருக்குதம்மா
தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே
எம்மை இவ்வுலகத்திக்கு ஈன்றவளே
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிர் அணுவில்
சுவாசிக்கிறோம் தாயே
அம்மா அம்மா என் உயிரே
நீ எங்கே! எங்கே உன் இனிய முகம்
உன் அமைதி நிறைந்த கண்கள்
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
உன் போல் துணை இருப்பார்
உலகில் எமக்கு இல்லை
கணப்பொழுதில் நடந்தது என்ன
உன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்ன
நம்ப முடியவில்லை நடந்தது என்னவென்று
அம்மா அம்மா யாரைக் கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டுகள் ஒன்று உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
Deepest condolences to you and your family Sivam aka from alaveddi