
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை பிருந்தாவனம் K.K.S. Road ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணப்பர் அற்புதநாயகம் அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கண்ணப்பர்(கிருஷ்ணாஸ் முன்னாள் பிரபல வர்த்தகர், தெல்லிப்பழை) அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயந்தன்(பிரித்தானியா), அஜந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுஷா, சந்தியா, பூம்பொழிலாள் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆர்த்தி, வித்தகி, ராகுல், கவிஷா, காவியா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சிவநாயகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகி(இலங்கை), தாமோதரன்(பிரித்தானியா), லோகநாயகி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தியாகராஜா(இந்தோனேசியா), செல்லையா(பிரித்தானியா), காலஞ்சென்ற வெற்றிவேலு(பிரித்தானியா), பாக்கியநாயகி (இலங்கை), சிறிபிரகாசன் (அவுஸ்திரேலியா), நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தவமணி(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), சோமசுந்தரம்(மலேசியா), பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), மனோன்மணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
My heartfelt condolences to your family.