

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்ணையா விஜயகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு உருண்டு ஓடி
எம் இதயமும் இருண்டு விட்டதய்யா!
காலவன் கணக்கில் தப்பு என்று சொல்லுவதா!
கண்களை கண்ணீரில் குளமாக்கி
விதி செய்த விளையாட்டா!
தவமிருந்து பெற்ற பெற்றோரை தவிக்கவிட்டு வந்து
உங்களோடு கூடி வாழ்ந்தநாள் முதலாய்
என்னை அரவனைத்த தெய்வமே!
வலி என்றால் என்ன தெரியாமல் வளர்ந்த
என்னை வலியோடு வலியை தந்துவிட்டு
சோகத்தில் கதறியழ சொல்லாமல்
செல்ல என்னதான் அவசரமோ!
நலமுடன் வாழ்ந்து எல்லோரிடமும்
கருணையுடன் இரக்கம்காட்டி முன் நின்று
வழி நடத்திய தெய்வமே!
உங்களை நினைத்து உங்களுக்காக
வாழும்படி செய்துவிட்டு
தனிமையில் தவிக்கவிட்டு
சென்று விட்டீர்களே!
ஆரெமக்கு ஆறுதல் தந்து
எம்மை காப்பாரய்யா!
என்றும் உங்கள் நினைவுகள்
எம் உயிரோடு போராடி அலைபாயுதய்யா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
புங்கை நகர் கிராஞ்சியம்பதி முருகனை
வணங்கிப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!