
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி ஸ்ரீயோகேஸ்வரன் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கண்மணி, நல்லம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்திராஜ்(சுவீடன்), பதுமாஷனி, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீஸ்கந்தராசா, சித்திரவேல், காலஞ்சென்றவர்களான கெளரிதேவி, பாலச்சந்திரன் மற்றும் செளந்தராஜன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அவனீஷ், ஆதித், ரியாஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்.