உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்மணி இராசையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் கடந்ததம்மா மாண்டுபோன உங்கள் நினைவால் மீண்டுவர முடியாமல் தவிக்கின்றோம்...
காலம் கடந்து காலனவன் எமை அழைக்கும் வரை கண்ணீரோடு காத்திருப்போம் உனைக் காணும் வரை உன் நினைவு சுமந்த வலிகளைத் தாங்கி வழிகளைத் தேடித் தொடரும் இந்த சுகமான வாழ்க்கைப் பயணத்தில் எமக்கு வழிகாட்டி வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள கடவுளாய் வாழ்வீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...