யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட காங்கேசன் தயாளன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில் இல்லறம்
வாழ்ந்திருந்தோம் இன்று நாம்
தவிக்கின்றோம் நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும்
காட்டி உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள் ஐயா!
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உம்மை தேட எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும்
இருந்து வழிகாட்டும் துணை
நீங்கள் தான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை
பிரிந்து இனி எமக்கு ஆறுதல்
யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Just like your deeply missed late dad, you carry the same looks and charm that reminded us so much of him. My late father, Mr. Rajakumar Kasippillai from Malaysia, shared many fond memories of your...