
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை ஐயனார் கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி கனகசூரியம் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கன்னியா கனகசபாபதி சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் நாகபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஷாலினி, பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயானந்த், வித்தி ஆனந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகதாஸ், கனகமலர், காலஞ்சென்ற கனகதுங்கம், கனகமணி, கனகராணி, கனகராஜ், கனகேஸ்வரி, கனகசுந்தரி, கனகவதனா, செல்வநாயகி, யோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கமணி, ராஜசிங்கம், செல்வராணி, காலஞ்சென்ற யோகராணி, லிங்கேஸ்வரன், தர்மலிங்கம், ராஜமனோகரன், பிரபாகரன், சிவநாகேஸ்வரி, சிவயோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவனேசன், சிவஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராகுல், சித்தார்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இல. 15, ஐயனார் கேணி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல.15, ஜயனார்கேணி ஒழுங்கை,
திருகோணமலை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
அன்பான ஒருவரை இழந்த வருத்தத்தை சுமப்பது எளிதல்ல, அவரை அறிந்த மற்றும் நேசிப்பவர்களின் நினைவாக அவர் என்றும் வாழ்வார். தயவுசெய்து எங்கள் இரங்கலை ஏற்றுக் கொள்ளுங்கள்.