யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விக்னேஸ்வரகடாக்ஷன் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சுந்தரம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தஞானியார் வேதநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாலர்(வைத்தியர்- லண்டன்), பேரருள்(லண்டன்), காலஞ்சென்ற மஹோதரர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஅருட்செல்வி(லண்டன்), சஞ்சீவன்(கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஹரித்யன், அக்ஷயன், ப்ருத்திகன், சஜினி, சனந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம், பாலசுந்தரம்(சட்டத்தரணி- மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இன்பம் மற்றும் நாகேஸ்வரி(லண்டன்), நடராஜா(இளைப்பாறிய அதிபர்- அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலை), அருணகிரிநாதன்(இளைப்பாறிய உபதபாலதிபர்- உபதபாலலுவலகம், அராலி தெற்கு), ஞானசம்பந்தன்(இளைப்பாறிய வங்கி உத்தியோகத்தர்- இலங்கை வங்கி, பிரதான கிளை, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இளையதம்பி(லண்டன்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சண்முகசுந்தரம்(பல்வைத்தியர்- மலேசியா), உமைதேவி(மலேசியா), லலிதாம்பிகை(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 7.00 மணியளவில் அராலி தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences .I am still remember that when he was in the Jaffna Hospital he payed special attention for Araly pupils