யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணிற்காய் வாழ்ந்து மரணித்த மாவீரரைப் போல்
மனைவிமக்கள் உறவினர்க்காய் வாழ்ந்து மரணித்த மாமனிதரே
ஆண்டு இரண்டானதோ என்று ஆச்சரியம் அடைகின்றோம்
ஆண்டுச் சிராத்தம் செய்து ஆத்மசாந்திக்காய்ப் பிரார்த்திக்கின்றோம்.
ஆலமரமாய் இருந்தீர்கள் ஆனந்தமாய் நாம் இருந்தோம்
ஆலமரம் சரிந்ததனால் ஆனந்தமும் குறைந்தது அப்பா
உருவம்தான் இல்லையப்பா உணர்வாய் உடன் உறைகின்றீர்கள்
உயிருடன் எம்மோடு உடனிருந்து வழி நடத்துகிறீர்கள்
தியாகத்தைக் காட்டுவது தியாகிகளின் இலட்சியமாம்
தியாகராஜாவாக வாழ்ந்து தியாகியாய் மறைந்தீர்கள்
பெற்றவரை வாழவைத்துப் பெருமகிழ்வு அடைந்தீர்கள்
உற்றவர்க்கும் உறவுகட்கும் உறுதுணையாய் இருந்தீர்கள்
சாதாரண குடும்பத்தில் பிறந்த சாதனையாளன் நீங்களப்பா
சாதித்துக் காட்டிய சத்தியவான் நீங்கள் அப்பா
சிறப்பாய் சந்ததிவாழ சீரியமாய் நின்று உழைத்தீர்
சிந்தித்துச் செயலாற்றிய செயல்வீரன் நீங்கள் அப்பா
கொடுப்பதுதான் உங்கள் விருப்பம் குறைவின்றிச் செய்தீர்கள்
தடைப்படாமல் செய்கின்றனர் தம் புதல்வர்கள் இப்பொழுதும்
சந்ததி சாதிக்கும் உங்கள் சாதனைகள் அத்தனையும்
சாத்தியம் தந்தவரே சாந்தி அடைவீராக
என்றும் வருத்தத்துடன் நினைவு கூரும் அன்பு மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், மைத்துனர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
prayers for the soul om shanthi