
யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல்
எமக்கு சொல்வதற்கு
நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு
வாழ்ந்து- எங்களை
வாழ
வைத்த தெய்வமே
உங்கள்
ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள்
யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே
நேசத்துடன் எங்களை
ஆளாக்கி
நேர்மையுடன்
வாழ்ந்தீர்களே அப்பா !
எங்களுடைய வெற்றிகளுக்குப்
பின்னால் நீங்கள் இருந்தீர்கள்
தோல்விகளுக்குப் பின்னால்
தோள் கொடுத்தீர்கள்
மறக்க முடியவில்லை அப்பா !
வருடங்கள் எத்தனை
சென்றாலும்
எம் நெஞ்சை
விட்டு அகலாது
உங்கள்
நினைவுகள் அப்பா !
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எமதருகில் இல்லையே
கண்மணி போல் எம்மைக்
காத்த
அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Dear Senthil and family, Our deepest condolences on your loss. Wishing your family good health and a return to normality soon. Sasi and Shyamala