

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தனபாலசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தன்(பிரான்ஸ்), சஜீவன்(ஜேர்மனி), சாருதன்(பிரான்ஸ்), சங்கீதன்(பிரான்ஸ்), சர்மிலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நளாயினி, றஞ்சினி, யாழினி, சர்மிளா, சிவசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினம்மா(கிளி- கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, புஸ்பரானி(இலங்கை), தனலட்சுமி(இலங்கை), சிவனடி(பிரான்ஸ்), சிறிஸ்கந்தராஜா(கனடா), மகேஸ்வரன்(ரூபன்- கனடா), காலஞ்சென்ற பூபாலசிங்கம்ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி(துரை), சின்னத்துரை(பத்தமேனி), சின்னத்துரை(நவந்கிரி) மற்றும் புலேந்திரன்(இலங்கை), தயாவதி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா), காமினி(கனடா), காலஞ்சென்ற அரவிந்தமலர், திருவருள்நாதன்(சுவிஸ்), இலட்சியநாதன்(இலங்கை), வேலருள்(சுவிஸ்), காலஞ்சென்ற தனமலர்(அத்தா), சிவகரன்(சேரங்கன்- கனடா), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றெனிசன், சஞ்ஜீவ், சாகித்யன், அபிசாந்த், அக்சித், அஸ்விகா, நிதுன், மகிழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.