Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 JAN 1955
இறப்பு 05 JAN 2025
திருமதி கந்தையா சுந்தரம்
வயது 69
திருமதி கந்தையா சுந்தரம் 1955 - 2025 நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தினை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரம்  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கூட நடந்த கால்கள் எங்கே
கூட்டி சென்ற கைகள் எங்கே
கூடைப் பூக்கள் கொட்டுகின்றோம்
இங்கு வர மாட்டாயா?

அம்மா... அம்மா... ஆருயிரே
அம்மா..அம்மா... பேருயிரே

விரல் பிடித்து பள்ளி சேர்த்தாய்
விரதம் இருந்து கோயில் போனாய்
குரல் எழுப்பி அழைக்கின்றோம்
மீண்டும் வர மாட்டாயா?

அம்மா.. அம்மா... ஆருயிரே

வண்ணம் சேர்த்து வாழ்க்கை தந்தாய்
வாசம் வீசும் நேசம் தந்தாய்
கண்ணும் மனசும் கனத்து பேச்சும்
காண முடியாதா உன்னை..?

அம்மா...அம்மா.. ஆருயிரே
அம்மா.. அம்மா... பேருயிரே...

அன்னம் இட்டு அன்பு சேர்த்தாய்
கல்வி இட்டு அறிவு தந்தாய்
இன்னும் இனியும் நீயே வேண்டும்
என்று மீண்டும் நீ வருவாய்....?

அம்மா ... அம்மா.. ஆருயிரே....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 05.30 மணியளவில் யாழ்ப்பானம் வில்லூன்றி புண்ணிய தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியைகள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனை நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தான் தோன்றிப்பிள்ளையர் முன்வீதி. துடரிக்குளம் வீதி, செட்டிகுளம். 


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.