
யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாகன், சுதாகன், சுமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபிகா, துஷாந்தினி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மலேக்கா, மய்ரா, சஷ்வின், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேவி, மகேஸ்வரி, பஞ்சநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருவருட்செல்வம், மகேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-02-2023 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details