யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவில், உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் மதிய போசன நிகழ்வுகள் 180 Ground Floor, Markham Road, Scarborough, Toronto, Ontario, Canada எனும் முகவரியில் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
RIP