கண்ணீர் அஞ்சலி ஶ்ரீநாதன் கந்தையா அகவை 66 ல் அடியெடுத்து வைக்கும் நல்ல நண்பன் ஶ்ரீநாதன் கந்தையா அதை எட்டுமுன்பே மறந்த செய்தி கேட்டு நெஞ்சம் கலங்கி நின்றோம் என்ன கவலையிது எப்படி நாம் எடுத்துரைப்போம் மெல்ல முடியவில்லை மறந்து வெல்லவும் முடியவில்லை எம் நண்பனின் ஶ்ரீ யின் பிரிவுதனை புன்னகை பூத்து நின்றார் புது வதனம் மகிழ நின்றார் அமைதியான தோற்றம் அன்பான நேசமென எங்களுடன் வேலைசெய்த எங்கள் அன்பு நண்பன் ஶ்ரீ தன் தோளிலும் மனசிலும் எப்போதும் பண்பை சுமந்தார் பெருமை மிகு மனிதர் பண்பாய் பழகும் மனிதர் வேலையில் கரிசனமாய் இலகுவாய் பழகிட்ட தோழன் பழகுவதில் பேசுவதில் பெருமை சேர்த்த பண்பாளன் அதுதான் எங்கள் வேலைதள நண்பன் குடும்பத்தில் பாசமுள்ள ஒருவர் ஆசைகொண்ட கணவனாய் வாஞ்சையுள்ள அப்பாவாய் நேசம் கொண்ட மாமாவாய் ஆசை மிகுந்த சோதரனாய் யாவரும் வியக்கவைக்கும் விந்தை மிகு மனிதரென யாவரும் கண்டுகொண்டோம் வாழ்ந்தது போதுமென வானுலகு சென்று விட்டீர் வையம் போற்றும் உமை வாழ்பவர் இருக்கும்வரை வாயார வாழ்த்துமைய்யா.. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி ??????????? வேலைத்தள நண்பர்கள்.