எமது கண்ணீர்த்துளிகள் கடல் அலைகளும் ஒய்வதுண்டு காணும் காட்சிகளும் மறைவதுண்டு கணக்கிலும் கழித்தல் பிரித்தல் உண்டு காலனும் தன் கடமைகளை புரிவதுண்டு ஆனால் பாதிவயதில் பறித்தானே இவ்பகுத்தறிவாளரை இதுவும் நியாயமா பாசமும் நேசமும் கொண்டு பழகும் பண்பாளர் கடமைகளை செய்யும் கண்ணியவாளர் கனவிலும் நினைக்காமல் காருண்யமானவரை இழந்துவிட்டோம் நாம். இவர் எமக்கு பலவிதமான உதவிகள் புரிந்து எமது இதயத்தில் இடம் பிடித்து கொண்டவர். இவரின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும் இவ் உத்தமரை இழந்து தவிக்கும் குடும்பத்தவருக்கும், உடன்பிறப்புகுடும்பத்தவருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது துயர் நிறைந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியும் அமைதியும் பெற இறைவனை வணங்குகின்றோம். வியாகரெத்தினம் குடும்பம்