யாழ். இமையாணன் வடக்கு, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(துரை) சின்னமணி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், யசோதையம்மா, காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை(வைத்தியசாலை ஊழியர்- ஊறணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரன்(பிரித்தானியா), கஜேந்திரன்(ஆசிரியர், யாழ்.கரணவாய் மகா வித்தியாலயம்), சுபேந்திரன்(முன்னாள் ஊழியர் கொமர்ஷல் பேங்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பர்மினா(கொமர்ஷல் வங்கி- திருநெல்வேலி) அவர்களின் அன்பு மாமனாரும்,
சூர்யதேவ் அவர்களின் அன்புப் பேரனும்,
நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மஞ்சுளா(அவுஸ்திரேலியா), சுதாமா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கணேசலிங்கம், கனகசபை, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கனகேந்திரம், கணேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,
மங்கையற்கரசி(பிரித்தானியா), சுந்தரம்(மலேசியா), நடராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான முருகேசு(மின்சாரசபை முன்னாள் ஊழியர்), சிவப்பு- தங்கச்சிம்மா, கந்தப்பு ஞானம் ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமுத்து(மலேசியா) அவர்களின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Thanks to all துயர் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி