
-
24 FEB 1935 - 27 OCT 2020 (85 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டுக்கோட்டை, Sri Lanka Viborg, Denmark
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய் றோட்டை வதிவிடமாகவும், தற்போது டென்மார்க் Viborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னராசா அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேஸ்குமார்(டென்மார்க்), நகுலாம்பாள்(இலங்கை), அருள்நாயகி(இலங்கை), பத்மினி(டென்மார்க்), றயனி(டென்மார்க்), கிருஷ்ணவேணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சுப்பிரமணியம், நாகரத்தினம் நாகேஸ்வரி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வடிவாம்பிகாதேவி(டென்மார்க்), சிவானந்தா(இலங்கை), காலஞ்சென்ற சிறிரங்கநாதன்(இலங்கை), தியாகராஜா(டென்மார்க்), சுதாகரன்(டென்மார்க்), நித்தியகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கார்த்திகா(டென்மார்க்), துவாரகை(டென்மார்க்), யசோதரன்(இலங்கை), லக்ஷிகா(டென்மார்க்), சுகந்தன்(டென்மார்க்), சுவேதினி(டென்மார்க்), பிரவீன்(டென்மார்க்), ஜனார்த்தனன்(லண்டன்), சுதர்சன்(டென்மார்க்), நிவேதன்(லண்டன்), அனிஷ்கா(லண்டன்), பாலமனோகரன்(இலங்கை), ரவிகுமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் நடைபெற்று பின்னர் 02-11-2020 திங்கட்கிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
