யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடவுளாக கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்து
இன்றோடு பன்னிரு மாதம்!!! 
அம்மா!நெஞ்சமெல்லாம்
 உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது....
உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிராத்திக்கின்றோம்